பிக்பாஸ் 5 ரீ-யூனியன் - சஞ்சீவ், வருண், அக்ஷரா வைரல் புகைப்படங்கள்
ADDED : 1369 days ago
விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்ற வாரம் டபுள் எவிக்ஷனாக வருண் மற்றும் அக்ஷரா எலிமினேட் செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் நடிகர் சஞ்சீவ் வெளியேறினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் சஞ்சீவ் வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சஞ்சீவ், கடந்த வாரத்தில் எலிமினேட் ஆன வருண் மற்றும் அக்ஷராவை சந்தித்துள்ளார். அதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.