அறுவை சிகிச்சைக்கு பின் மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்புகிறார் மகேஷ்பாபு
ADDED : 1370 days ago
தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா. வங்கி கடன்கள் சம்பந்தப்பட்ட கதைகள் உருவாகி வரும் இந்த படத்தை பரசுராம் இயக்க, தமன் இசையமைக்கிறார். இப்படம் வருகிற ஏப்ரல் 1ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தபோது மகேஷ்பாபுவின் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வந்தார். அதன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மகேஷ் பாபுவின் உடல்நலம் நன்றாக தேறி விட்டதால் ஜனவரி இறுதியில் மீண்டும் சர்க்காரு வாரி பாட்டா படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. மேலும் இப்படத்தின் முதல் பாடல் ஜனவரி இறுதியில் வெளியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.