உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா

நடிகர் அருண் விஜய்க்கு கொரோனா

நடிகர் அருண் விஜய் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது. வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். என் மருத்துவர் அறிவுரைப்படி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் சிகிச்சை பெற்று வருகிறேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார்.

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அரை டஜன் படங்கள் தயாராகி வருகின்றன. அவர் நடித்துள்ள பார்டர், சினம், அக்னிச்சிறகுகள், பாக்சர், யானை'' ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டன. ஒவ்வொரு படமாக அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இவை தவிர மேலும் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !