மேலும் செய்திகள்
சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி'
1340 days ago
மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம்
1340 days ago
பழம்பெரும் பாலிவுட் நடிகர் பிரேம் சோப்ரா. 1960களில் தொடங்கி 2020 வரை தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோ, வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். அதிகமாக வில்லன் வேடங்களில் நடித்தார். கடைசியாக பவுன்டி அவுர் பாப்லி படத்தில் நடித்தார்.
86 வயதாகும் பிரேம் சோப்ரா முதுமை காரணமாக சினிமாவை விட்டு விலகி மனைவி உமா சோப்ராவுடன் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் திடீர் காய்ச்சல் காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் மனைவி அவருடன் இருந்ததால் அவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மனைவிக்கு 75 வயது ஆகிறது.
தற்போது இருவரும் லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாலிவுட் நடிகர்கள் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பாலிவுட் நட்சத்திரங்கள் இடையே கலக்கத்தை உருவாக்கி இருக்கிறது.
1340 days ago
1340 days ago