மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
1339 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
1339 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான டாப் ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஆரம்பமாகியுள்ளது. அதற்கான புரோமோவும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. ஆனால், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அதிக பிரபலமடைந்தவர் புகழ். அவர் அந்த புரோமோவில் இல்லை என்பதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். குக் வித் கோமாளி சீசன் 3ல் பங்குபெறும் அனைத்து பிரபலங்களிடமும் கேள்வி எழுப்பி வந்தனர்.
அப்படி ரசிகர்கள் செப் தாமுவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்துள்ள தாமு புகழ் 100% வருவார் என கூறியுள்ளார். இந்த பதிலால் புகழின் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.
காமெடி நடிகரான புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இருப்பினும் குக் வித் கோமாளி என்றால் அனைத்து ரசிகர்களுக்கும் ஞாபகம் வருவது புகழ் தான்.
1339 days ago
1339 days ago