டூர் சென்ற இடத்தில் நயன்தாராவை சந்தித்த மெஹ்ரின்
ADDED : 1379 days ago
கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி வெளிநாடுகளுக்கு டூர் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த புத்தாண்டுக்கு துபாய்க்கு சென்றார்கள். அங்கு உள்ள மிக உயரமான கட்டிடத்தின் முன்பாக அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டார்கள். மேலும் துபாய் சென்ற இடத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை நடிகை மெஹ்ரின் சந்தித்துள்ளார். இவர் தமிழில், நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா, பட்டாஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். விக்னேஷ் சிவன், நயன்தாராவை தான் சந்தித்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.