பாடலாசிரியர் காமகோடியன் மறைவு
ADDED : 1376 days ago
1980களில் பிரபல பாடலாசிரியராக திகழ்ந்த காமகோடியன்(76) வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்னையால் சென்னையில் காலமானார். தேவதை, கண்ணாத்தாள், பாட்டாளி, தொடரும், சிகாமணி ரமாமணி, காலாட்படை, வல்லமை தாராயோ உள்பட ஏராளமான படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை எழுதியிருப்பவர் கவிஞர் காமகோடியன்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா என 3 தலைமுறை இசையமைப்பாளர்களுடன் இவர் பணியாற்றி உள்ளார். கடைசியாக ‛திருட்டு ரயில்' என்ற படத்தில் மொத்த பாடல்களையும் இவர் எழுதினார். அதன்பின் வயது மூப்பால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.