ஆத்மிகா திருப்பதியில் சாமி தரிசனம்
ADDED : 1431 days ago
கோயம்புத்தூர் பொண்ணு ஆத்மிகா. மீசைய முறுக்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார். அதன்பிறகு புதிய வாய்ப்புகள் எதுவும் இதுவரை அமையவில்லை. ஆனாலும் அவர் நடித்து முடித்துள்ள காட்டேரி, கண்ணை நம்பாதே, நரகாசுரன் படங்கள் வெளிவர வேண்டியது இருக்கிறது. இந்த படங்கள் பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கிறது.
இந்த நிலையில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்தார் ஆத்மிகா. தடைபட்டு நிற்கும் படங்கள் வெளிவரவும், புதிய வாய்ப்புகள் கிடைக்கவும் அவர் வேண்டுதல் செய்துள்ளார். திருப்பதி சென்ற படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள ஆத்மிகா ஒளி, ஒளி, தெய்வீகம் என்று குறிப்பிட்டுள்ளார்.