உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரிலீசுக்கு தயாராகும் குருசோமசுந்தரத்தின் சட்டம்பி

ரிலீசுக்கு தயாராகும் குருசோமசுந்தரத்தின் சட்டம்பி

ஜோக்கர் படம் மூலம் தமிழ் ரசிகர்களை கவன ஈர்ப்பு செய்த குரு சோமசுந்தரம், இங்கு மட்டுமல்ல மலையாள திரையுலக படைப்பாளிகளையும் ரொம்பவே கவர்ந்து விட்டார். அந்த வகையில் சமீபத்தில் மலையாளத்தில் டொவினோ தாமசுடன் இணைந்து இவர் நடித்த மின்னல் முரளி படம் வெற்றி பெற்றுள்ளதுடன் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் பெற்று தந்துள்ளது.

இந்த படத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பை பார்த்துவிட்டு மோகன்லால் தான் இயக்க உள்ள பாரோஸ் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவரை அழைத்துள்ளார். இந்த நிலையில் மின்னல் முரளிக்கு கிடைத்த வரவேற்பால் ஏற்கனவே குரு சோமசுந்தரம் மலையாளத்தில் நடித்து வந்த சட்டம்பி என்கிற படமும் விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது. இந்த படத்தில் இளம் நடிகர் ஸ்ரீநாத் பாஷிக்கு நண்பனாக முனியாண்டி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் குரு சோமசுந்தரம். இந்தப் படத்தை அபிலாஷ் எஸ் குமார் என்பவர் இயக்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !