உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் சீசன் 5: பணப்பெட்டியுடன் வெளியேறிய சிபி!

பிக்பாஸ் சீசன் 5: பணப்பெட்டியுடன் வெளியேறிய சிபி!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்தடுத்து யார் வெளியேற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் எலிமினேட் ஆகமாலேயே முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட சிபி வெளியேறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பணப்பெட்டி டாஸ்க்கை சரத்குமார் தொடங்கி வைத்தார். 3 லட்ச ரூபாயில் ஆரம்பமான இந்த டாஸ்க் படிப்படியாக ஏலத்தில் உயர்வது போல் உயர்ந்தது. ஒருகட்டத்தில் போட்டியாளர்களே இவ்வளவு தொகை வந்தால் வெளியேறிவிடுவேன் என வாய்விட்டு சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் பணப்பெட்டி டாஸ்க்கில் 12 லட்ச ரூபாய் தொகை எட்டியபோது சிபி அதை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

கோல்டன் டிக்கெட் டாஸ்க்கில் அமீருடன் கடைசி வரை டப் கொடுத்தவர் என்பதால் சிபி கடைசி வரை பிக்பாஸ் வீட்டில் இருப்பார் என்றே அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் அவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வெளியேறியது சிபியின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !