ஸ்டைலிஷ் கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா தத்தா
ADDED : 1363 days ago
நகுல் நடிப்பில் வெளியான 'தமிழுக்கு என ஒன்றை அழுத்தவும்' படத்தின் மூலம் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் அமையாததால் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றார். தற்போது மகத் நடிப்பில் உருவாகி வரும் 'காதல் கண்டிஷன் அப்ளே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளதால் விரைவில் ரிலீசாகும் என தெரிகிறது. வேறு படங்கள் இல்லாததால் படவாய்ப்புகளை கைப்பற்ற தொடர்ந்து கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் புதிதாக அவர் வெளியிட்டுள்ள ஸ்டைலிஷ்ஷான கவர்ச்சி புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.