போலி அறிக்கை : சட்ட நடவடிக்கை எடுக்க சூர்யா முடிவு
ADDED : 1362 days ago
ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடுக்கு சாதகமாக உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த தீர்ப்பை வரவேற்றும், தமிழக முதல்வரை பாராட்டியும், கொங்கு மண்டல மக்கள் பயன்பெறுவார்கள் என்பதாக குறிப்பிட்டும் சூர்யா பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. இது போலியானது என்று சூர்யாவின் நண்பரும், சூர்யாவின் தயாரிப்பு நிறுவன செயல் அதிகாரியுமான ராஜசேகர பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சூர்யா பெயரில் வெளியான அந்த அறிக்கையைப் புறக்கணிக்குமாறும் இந்தப் போலியான அறிக்கையை வெளியிட்டவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.