உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா

கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் கூறுகையில், ‛‛லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. கவனமாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டபோதிலும் கொரோனா நோய் பாதிப்பு என்னை தொற்றிக் கொண்டது. தயவு செய்து அனைவரும் கொரோனா விதிமுறை, கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவும். நான் என்னை தனிமைப்படுத்தி சகிச்சை பெற உள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் விரைந்து செலுத்தி கொள்ளுங்கள். விரைவில் குணமாகி மீண்டும் வருவேன்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !