25 வருடத்திற்கு பிறகு சாதித்த மோகன்ராஜா : ஜெயம் ரவி நெகிழ்ச்சி
ADDED : 1382 days ago
ஜெயம் படம் மூலம் இயக்குனராக தமிழில் அறிமுகமானவர் இயக்குனர் மோகன்ராஜா.. அதனாலேயே நீண்ட நாட்களாக தனது தம்பியை போல ஜெயம் ராஜா என்கிற அடையாளத்துடனேயே வலம் வந்த மோகன்ராஜா, முதலில் தெலுங்கில் ஹனுமான் ஜங்சன் என்கிற படத்தை தான் இயக்கினார். அந்தப்படம் 2001ல் வெளியானது. அதற்கு முன்னதாக 1997ல் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான ஹிட்லர் உட்பட சில படங்களில் தெலுங்கி உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் மோகன்ராஜா,
கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர் என்கிற படத்தையே இயக்கி வருகிறார் மோகன்ராஜா. ஹிட்லர் பட நூறாவது நாள் விழாவில் சிரஞ்சீவிக்கு மோகன்ராஜா மாலை அணிவிக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவரது தம்பி ஜெயம் ரவி, “என்ன ஒரு அருமையான பயணம் அண்ணா” என நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.