தயாரிப்பாளர் முத்துராமன் மரணம்
ADDED : 1361 days ago
பழம்பெரும் தயாரிப்பாளர் எம்.முத்துராமன். ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் உட்பட 26 படங்களும் மேல் தயாரித்தவர். 83 வயதான முத்துராமன் சென்னை தி.நகரில் மகள் வீட்டில் வசித்து வந்தார். முதுமை காரணமாக உடல்நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு சுமங்கலி என்ற மனைவியும், அனு என்ற மகளும் உள்ளனர்.