கடலுக்கடியில் மீன்களுடன் நீந்தும் நிக்கி கல்ராணி!
ADDED : 1363 days ago
ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்த டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கிகல்ராணி அதையடுத்து பல படங்களில் நடித்தவர் தற்போது தமிழில் இடியட் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இது தவிர தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் நிக்கிகல்ராணி சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி அதன் பிறகு அதிலிருந்து மீண்டு வந்தவர் தற்போது வெயிட் குறைத்து ஸ்லிம் ஆகியிருக்கிறார். இப்படியான நிலையில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடலுக்கடியில் மீன்களுக்கு நடுவில் தான் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அபார திறமையை பார்த்து நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.