சிம்புவைப் போலவே டாக்டர் பட்டம் பெற்ற பிக்பாஸ் அபிராமி
ADDED : 1363 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் அபிராமி. இவர் ஒரு பரதநாட்டிய கலைஞரும் கூட. இந்த நிலையில் பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதாக செயின்ட் மதர் தெரசா என்ற பல்கலைக் கழகத்தின் சார்பாக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை புகைப்படத்துடன் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் அபிராமி. இதையடுத்து அபிராமிக்கு சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.