உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தனுஷின் மாறன் அப்டேட்

ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட தனுஷின் மாறன் அப்டேட்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ள படம் மாறன். இந்தப் படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையில் மாறன் படத்தின் ஓப்பனிங் பாடல் குறித்த ஒரு அப்டேட்டை தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டிருக்கிறார். அதில், மாறன் படத்தில் இடம்பெற்றுள்ள ஓப்பனிங் பாடலை தனுஷ் பாடி இருக்கிறார். அவருடன் இந்த பாடலை தெருக்குரல் அறிவும் இணைந்து பாடி இருக்கிறார். விவேக் எழுதியுள்ள இந்த பாடலின் சிங்கிள் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !