நடிகர் கருணாஸ் நடிப்பில் ‛ஆதார்'
ADDED : 1362 days ago
'அம்பாசமுத்திரம் அம்பானி', 'திருநாள்' ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் இயக்கும் படத்தில் நடிகர் கருணாஸ் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‛ஆதார்' எனப் பெயரிட்டுள்ளனர். இதில் கருணாஸ் உடன் அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர், நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரிக்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.