உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பாட்ஷா அளவிற்கு பேராசை படும் அமரன்

பாட்ஷா அளவிற்கு பேராசை படும் அமரன்


தளபதி நடிகரின் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக, அவர் நடிப்பது போன்று தனக்கும் கதை தயார் செய்யுமாறு இயக்குனர்களை கேட்டுக்கொண்டு வந்த அமரன் நடிகர், சமீபத்தில் ஒரு இயக்குனரிடம், பாட்ஷா படத்தை போன்ற ஒரு கதை சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அதிலும், உச்ச நடிகருக்கே சவால் விடும் வகையில் அதிரடியான காட்சிகள் அந்த படத்தில் இருக்க வேண்டுமென்று பெரிய, 'பில்டப்' கொடுத்துள்ளார்.

அதைக்கேட்ட அந்த இயக்குனரோ, 'நீங்கள் சொன்ன அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க, உச்ச நடிகரே தயங்கி வருகிறார். இந்நிலையில், உங்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. ஆசைப்படலாம் ஆனால், தகுதிக்கு மீறி பேராசை எல்லாம் படக்கூடாது...' என்று கூறி, நடிகருக்கு ஒரு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

முருகன்
2026-01-25 18:11:40

இவர் படம் அமரன் வெற்றிக்கு இவர் காரணமில்லை என்பது அடுத்து வந்த இரு படங்கள் தான் சாட்சி இது தெரியாமல் ஆடுவது ஏன்