25 நாட்கள் பிரம்மாண்டமாக படமாக்கப்படும் கோபிசந்த் பட கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி
தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக அறிமுகம் ஆகி பின்னர் கதாநாயகனாக மாறி அவ்வப்போது சில ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் கோபிசந்த். தமிழில் கூட ஜெயம் படத்தில் வில்லனாக நடித்திருந்தார. ஆனால் சமீப வருடங்களாக அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி எதுவும் அமையவில்லை. இந்த நிலையில் 'காஸி' படத்தை இயக்கிய சங்கல்ப் ரெட்டி தற்போது இயக்கி வரும் படத்தில் கதாநாயகனாக கோபிசந்த் நடித்து வருகிறார். இது இவரது 33வது படம்.
வரலாற்றுப் பின்னணியில் உருவாகி வருவதாக சொல்லப்படும் இந்த படத்திற்காக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ஒன்று பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதற்காக மிகப்பெரிய செட் ஒன்று அமைக்கப்பட்டு கிட்டத்தட்ட 25 நாட்கள் இந்த காட்சி தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகிறது. தெலுங்கு சினிமாவிலேயே இதுவரை வரவில்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த சண்டைக் காட்சியை ஆக்சன் இயக்குனர் வெங்கட் உருவாக்கி வருகிறாராம்.