மன்மத லீலை - பாலசந்தர் தலைப்பில் வெங்கட்பிரபு
பாலசந்தர் இயக்கத்தில், எம்எஸ் விஸ்வநாதன் இசையமைப்பில், கமல்ஹாசன், ஆலம், ஹேமா சவுத்ரி, ஜெயப்பிரதா, ஒய் விஜயா மற்றும் பலர் நடிக்க 1976ம் ஆண்டில் வெளிவந்த படம் 'மன்மத லீலை'. பெண்கள் மீது மோகம் கொண்ட நாயகனாக கமல்ஹாசன் நடித்த படம். படத்தின் கதைக்கும் தலைப்பிற்கும் மிகவும் பொருத்தமான படம்.
அந்தப் படத்தின் தலைப்பில் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்க, சம்யுக்தா ஹெக்டே, ஸ்முருதி வெங்கட், ரியா சுமன் கதாநாயகிகளாக நடிக்க உள்ளனர்.
வெங்கட்பிரபுவின் 10வது படமாக உருவாக உள்ள இப்படத்தை தெலுங்கிலும் அதே பெயரில் தயாரிக்க உள்ளார்களாம். பிரேம்ஜி இசையமைக்கிறார். 'வெங்கட்பிரபுவின் குயிக்கி', அதாவது வெங்கட்பிரபுவின் விரைவுப் படம் என அவரே குறிப்பிட்டுள்ளார்.
படத்தின் தலைப்பை மட்டும்தான் கடன் வாங்கியுள்ளார்களா, அல்லது கதை, காட்சிகளையும் சேர்த்து கடன் வாங்கியுள்ளார்களா என்பது குறித்து இனிமேல்தான் தெரிய வரும்.