'கொரோனா நெகட்டிவ்'; கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி
ADDED : 1355 days ago
கொரோனா 3வது அலையில் பல சினிமா பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நடிகை கீர்த்தி சுரேஷும் ஒருவர். ஒரு வாரத்திற்கு முன்பு, தனக்கு கொரானோ பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், லேசான அறிகுறி என்பதால் வீட்டிலேயே ஓய்வெடுப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, “நெகட்டிவ்' என்பது இந்தக் காலத்தில் பாசிட்டிவ்வான விஷயமாகிவிட்டது. உங்கள் அனைவரின் அன்புக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி. நீங்கள் அனைவரும், பொங்கல், சங்கராந்தியை சிறப்பாகக் கொண்டாடி இருப்பீர்கள் என நினைக்கிறேன்,” என்று குறிப்பிட்டு சில செல்பி புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே ஒல்லியாக மாறிய கீர்த்தி ஒரு வார கொரானோ பாதிப்பில் இன்னும் ஒல்லியாக மாறியிருக்கிறார். கொரானோவிலிருந்து மீண்டு வந்துள்ள கீர்த்திக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.