9 வருடங்களுக்குப் பிறகு படம் இயக்கும் கரு.பழனியப்பன்
ADDED : 1400 days ago
தமிழ் சினிமாவில் பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் என பல படங்களை இயக்கியவர் கரு.பழனியப்பன். அதோடு மந்திரப்புன்னகை, நட்பே துணை போன்ற படங்களில் நடித்திருக்கிறார். சமீபகாலமாக சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது ஆண்டவர் என்ற பெயரில் அவர் ஒரு படத்தை இயக்குகிறார்.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இது குறித்த தகவலை லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தங்களது உறுதிப்படுத்தியுள்ளது.