பூனம் பாண்டேவை கைது செய்ய தடை போட்ட உச்சநீதிமன்றம்!
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா சில மாதங்களுக்கு முன்பு ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது அவருடைய இணையதளத்தில் பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவின் ஆபாச படங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தன்னையும் காவல்துறை கைது செய்யலாம் என்று கருதிய பூனம் பாண்டே மும்பை உயர்நீதிமன்றத்தில் தடைகோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் பூனம் பாண்டே. அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. பூனம் பாண்டேவின் வழக்கறிஞர், ஆபாச படங்கள் இணையத்தில் வெளியானதற்கு பூனம் பாண்டே பொறுப்பு ஏற்க முடியாது. அவருக்கும் இதற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை. இந்த விவகாரத்தில் அவர் பாதிக்கப்பட்டவர் என்று வாதிட்டார். அவரது இந்த வாதத்திற்கு பிறகு பூனம் பாண்டேவை கைது செய்வதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள்.