உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு- காவல் நிலையத்தில் புகார்

நிக்கி கல்ராணியின் வீட்டில் திருட்டு- காவல் நிலையத்தில் புகார்

டார்லிங், மரகத நாணயம், மொட்ட சிவா கெட்ட சிவா என பல படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. சென்னையில் உள்ள இவரது வீட்டில் விருத்தாசலத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற 19 வயது இளைஞர் கடந்த சில மாதங்களாக வீட்டு வேலை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்த கேமரா மற்றும் அவரது ஆடைகளை அந்த இளைஞர் திருடிச் சென்றுள்ளார்.

இதையடுத்து அவர் மீது சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிக்கி கல்ராணி புகார் அளித்ததை அடுத்து திருப்பூரில் அந்த இளைஞரை கைது செய்த காவல் துறையினர், நிக்கி கல்ராணியின் வீட்டில் இருந்து அவர் திருடிய பொருட்களை மீட்டுக் கொடுத்துள்ளனர். அதையடுத்து அந்த இளைஞர் மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூறிய நிக்கி கல்ராணி, அவர் மீது தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்று உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !