மீண்டும் ரசிகர்களை களத்தில் இறக்கி விடும் விஜய்
ADDED : 1358 days ago
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 169 பேர் போட்டியிட்டார்கள். அதில் 100 பேர் வெற்றி பெற்றார்கள். அதையடுத்து வெற்றி பெற்ற விஜய் ரசிகர் மன்றத்தினர் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்கள். அதோடு ஊரக உள்ளாட்சி தேர்தலில் விஜய் ரசிகர்கள் அதிகமான பேர் வெற்றி பெற்றது சில அரசியல் கட்சிகளையும் அதிரவைத்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிடுவதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார் விஜய். குறிப்பாக, மாநகராட்சி மேயர் பதவிகளுக்கும் விஜய் ரசிகர்கள் போட்டிடப் போகிறார்கள். ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிகபடியான தொகுதிகளில் வெற்றி பெற்றதால் விஜய் மக்கள் இயக்கத்தினர் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.