அர்ஜூனின் மலையாள படப்பிடிப்பு மீண்டும் துவக்கம்
ADDED : 1356 days ago
தமிழில் தற்போது ஹீரோக்களுக்கு இணையான முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் மட்டுமே நடிகர் அர்ஜூன் நடித்து வரும் நிலையில் மலையாளத்தில் அவரை ஹீரோவாக வைத்தே ஒரு படம் தயாராகி வருகிறது. நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடிக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன் நடித்த ஆடுபுலியாட்டம் படத்தை இயக்கிய இயக்குனர் கண்ணன் தாமரக்குளம் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். ஆக்சன் படமாக உருவாகி வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களே மீதம் இருக்கின்றன. இந்தநிலையில் கொரோனா மூன்றாவது அலையும் அதனால் போடப்பட இருக்கும் புதிய கட்டுப்பாடுகளும் தீவிரமாவதற்கு முன்பாகவே மீதி படப்பிடிப்பையும் விரைந்து முடிக்க திட்டமிட்டுள்ளனர். வரும் ஜன-21ல் இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.