உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்தின் 61வது படம் தீபாவளிக்கு வெளியாகிறது

அஜித்தின் 61வது படம் தீபாவளிக்கு வெளியாகிறது

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருக்கும் படம் வலிமை. பொங்கலுக்கு திரைக்கு வர இருந்த இந்த படம் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மீண்டும் எச்.வினோத், போனிகபூர் கூட்டணியில் தனது 61வது படத்திலும் இணையப் போகிறார் அஜித்குமார். வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக பிட்டான கெட்டப்பில் நடித்துள்ள அஜித்குமார் அடுத்த படத்தில் இன்னும் வெயிட் குறைத்து நடிக்க போகிறார்.

அதற்காக தற்போது அவர் தீவிர சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். மேலும் அஜித்தின் 61வது படத்தின் பூஜை பிப்ரவரி மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறுகிறது. இப்படத்திற்கான செட் போடும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அதோடு மார்ச் மாதத்தில் அஜித்தின் வலிமை படம் திரைக்கு வரும் நிலையில் அடுத்து நடிக்கவிருக்கும் 61வது படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !