கவுதம் மேனன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ்
ADDED : 1401 days ago
சமீபகாலமாக இயக்கம் மட்டுமின்றி நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் கவுதம் மேனன். அந்த வகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு போலீஸ் வேடத்தில் நடித்தவர் அதையடுத்து மலையாளத்தில் டிரான்ஸ் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் தற்போது சிம்பு நடித்துவரும் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வரும் கவுதம் மேனன், அடுத்து ராகவா லாரன்ஸ் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஹாரர் கதைகளாக நடித்து வரும் லாரன்ஸ் இந்த படத்தில் ரொமான்டிக் கதையில் ஸ்டைலிஷான லுக்கில் நடிக்கப்போகிறார். இந்த படத்தையும் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்து வரும் ஐசரி கணேசன் தயாரிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.