சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது!
ADDED : 1356 days ago
தெலுங்கில் வெளியான கல்யாண ராமண்ணா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான வல்லவனுக்கும் புல்லும் ஆயுதம் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார் சந்தானம். அதையடுத்து தெலுங்கில் 2019ம் ஆண்டில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்திற்கு ஏஜென்ட் கண்ணாயிரம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தானம் துப்பறியும் நிபுணராக நடிக்கும் இந்தப் படம் நகைச்சுவை கலந்த திரில்லர் கதையில் உருவாகி வருகிறது. இப்படத்தில் சந்தானத்துடன் ஊர்வசி, குக் வித் கோமாளி புகழ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தை வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீத்தா இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் ஜனவரி 21ம் தேதியான நாளை காலை 10:15க்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.