சிம்புவை இயக்கும் ஓ மை கடவுளே பட இயக்குனர்
ADDED : 1439 days ago
மாநாடு படத்தை அடுத்து வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்து தல என சில படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. இதையடுத்து நடிப்பதற்கும் சில இயக்குனர்களிடத்தில் தொடர்ந்து கதை கேட்டு வருகிறார். இந்த நிலையில் கைவசம் உள்ள படங்களில் நடித்து முடித்ததும் அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் உருவான ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிப்பதற்கு கால்சீட் கொடுத்திருக்கிறார் சிம்பு. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதற்கு சில பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.