உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கீர்த்தி சுரேஷின் வாஷி படப்பிடிப்பு நிறைவு

கீர்த்தி சுரேஷின் வாஷி படப்பிடிப்பு நிறைவு

மரைக்கார் படத்தை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது மலையாளத்தில், நடித்து வரும் படம் 'வாஷி' (கோபம்) அவரது குடும்பத்தின் சொந்த தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடித்து வருகிறார்.. கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால நண்பரான விஷ்ணு ராகவ் என்பவர் தான் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த நவ-28ல் இதன் படப்பிடிப்பு துவங்கியது..

இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற வந்த நிலையில் தான் கீர்த்தி சுரேஷ் கொரோனா தொற்றுக்கு ஆளானார். சமீபத்தில் அதிலிருந்து மீண்டுவந்த நிலையில் மீண்டும் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்து நடிக்க ஆரம்பித்தார். இந்தநிலையில் நேற்றுடன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

இதுகுறித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் டொவினோ தாமஸ், “படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. விஷ்ணு ராகவ் போன்ற நண்பரின் முதல் படத்தில் நான் ஹீரோவாக நடித்தது மிகப்பெரிய மகி'ழ்ச்சி.. உலகம் உனக்கானதாக மாற வாழ்த்துகிறேன். என்னுடன் நடித்த அற்புதமான நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நன்றி” என கூறியுள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !