உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கட்சி தொண்டனாக நடிக்கும் சமுத்திரகனி

கட்சி தொண்டனாக நடிக்கும் சமுத்திரகனி

சமுத்திரகனிக்கு 'தொண்டன் கனி' என்ற பட்டப்பெயர் உண்டு. இந்த நிலையில் அவர் 'பப்ளிக்' என்ற படத்தில் ஒரு பிரபல கட்சியின் தொண்டனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரித்விகா நடிக்கிறார். காளி வெங்கட் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே.கே.ரமேஷ் தயாரிக்கிறார். இமான் இசை அமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

அறிமுக இயக்குனர் ரா.பரமன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: தமிழில் ஏராளமான அரசியல் படங்களும், அரசியல் தலைவர்களை பற்றிய படங்களும் வந்துள்ளது. இது அரசியல் கட்சியில் கனவுகளோடு திரியும் தொண்டர்களை பற்றியது. இதில் சமுத்திரகனி ஒரு கட்சியின் தொண்டனாக நடிக்கிறார். அவர் சந்திக்கும் பிரச்சினைகள் தான் படம். எந்தவித சமரசமும் இல்லாமல் ஒரு தொண்டனின் வாழ்க்கையை யதார்த்தமாக பதிவு செய்கிறோம். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !