உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பஞ்சர் ஒட்டிய மாணவியை படிக்க வைத்த சிவகார்த்திகேயன்

பஞ்சர் ஒட்டிய மாணவியை படிக்க வைத்த சிவகார்த்திகேயன்

நாகப்பட்டினத்தை சேர்ந்த பள்ளி மாணவி தேவசங்கரி. இவர், பிளஸ் 2 முடித்ததும் நர்சிங் படிக்க விரும்பினார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக தொடர்ந்து அவரால் படிக்க முடியவில்லை. இதையடுத்து அவரது தந்தை நடத்தி வந்த சைக்கிள் பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவரை பற்றிய வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இதை அறிந்த சிவகார்த்திகேயன், தேவசங்கரியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது அவர் தான் நர்சிங் படித்து நோயாளிகளுக்கு சேவை செய்ய விரும்புவதாகவும், அதுவே தன் கனவு என்றும் கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நர்சிங் பயிற்சி கல்லூரியில் தேவசங்கரி சேர்ந்து படிக்க ஏற்பாடு செய்துள்ளார் சிவகார்த்திகேயன். அதோடு தேவசங்கரியின் குடும்பத்தினருக்கு பொங்கலுக்கு புத்தாடையும் எடுத்து கொடுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !