அல்லு அர்ஜுனின் ஆஹா ஓடிடி தளம் தமிழிலும் கால்பதிக்கிறது
ADDED : 1453 days ago
புஷ்பா படத்திற்கு பிறகு தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகராகிவிட்டார் அல்லு அர்ஜுன். அதனால் தான் தெலுங்கில் நடத்திவரும் ஆஹா ஓடிடி தளத்தை தமிழ்நாட்டுக்கும் விரிவுபடுத்துகிறார்.
தமிழில் ஏற்கெனவே அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜீ5, ஹாட்ஸ்டார், சோனி லிவ் உள்பட பல ஓடிடி தளங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது மேலும் ஒரு ஓடிடி தளம் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
இந்த தளத்தில் முதல் படமாக ரைட்டர் வெளியிடப்பட உள்ளது. அறிமுக இயக்குனர் பிராங்கிளின் இயக்கி இருந்த இப்படத்தில் சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருந்தார். கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் இப்படம் வெளியானது. திரைப்படங்களுடன் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வெளியிட அல்லு அர்ஜுன் முடிவு செய்திருக்கிறார்.