உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'புஷ்பா' படத்திற்குப் பிறகு உயர்ந்த அல்லு அர்ஜூன் சம்பளம்?

'புஷ்பா' படத்திற்குப் பிறகு உயர்ந்த அல்லு அர்ஜூன் சம்பளம்?

தென்னிந்தியத் திரையுலகத்தில் 100 கோடி ரூபாய் சம்பளத்தை பெறும் நடிகர்கள் சிலர் மட்டுமே. ரஜினிகாந்த், விஜய், பிரபாஸ் ஆகியோர் மட்டும்தான் அந்தத் தொகையை இதுவரை கடந்துள்ளனர். சினிமாவை விட்டு அரசியல் பக்கம் போகாமல் இருந்திருந்தால் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியும் அந்தத் தொகையை எப்போதோ கடந்திருப்பார்.

'புஷ்பா' படத்தின் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜூனும் பான்-இந்தியா ஸ்டார் ஆக உயர்ந்துவிட்டார். அப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வியாபாரம் முதல் பாகத்தை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, தற்போது படத்தின் பட்ஜெட்டை அதிகரித்துள்ளார்களாம்.

இந்நிலையில் 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு தமிழ்த் திரைப்பட நிறுவனமான லைக்கா நிறுவனம் அல்லு அர்ஜூனை தங்களது தயாரிப்பில் நடிக்க வைக்க 100 கோடி ரூபாய் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பான்-இந்தியா படமாக உருவாக இருக்கும் அப்படம் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகலாம் என்கிறார்கள்.

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜூன் தமிழில் நடிக்க வேண்டிய ஒரு படத்தை பிரம்மாண்டமாக ஆரம்பித்து அப்படியே நிறுத்திவிட்டார்கள். அந்தப் படம் போல ஆகாமல் இருந்தால் சரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !