உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிம்புவின் பத்துதலை படத்தில் இணைந்த மாநாடு எடிட்டர்

சிம்புவின் பத்துதலை படத்தில் இணைந்த மாநாடு எடிட்டர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்த மாநாடு படத்தையடுத்து வெந்து தணிந்தது காடு மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிம்பு. அடுத்தபடியாக பத்து தல படத்தின் படப்பிடிப்பில் மார்ச் மாதம் முதல் கலந்துகொள்கிறார் சிம்பு . இந்த படத்தில் அவருடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். கிருஷ்ணா இயக்கும் இந்தப் படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

சிம்புவின் மாநாடு படத்திற்கு எடிட்டிங் செய்த பிரவீன் தற்போது பத்து தல படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மாநாடு படத்திற்கு சிறப்பாக எடிட்டிங் செய்து பாராட்டுகளை பெற்றதால் இந்தப்படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்துள்ளது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !