பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா: மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது
ADDED : 1348 days ago
கோவா, மும்பை, கோல்கட்டா, கேரளா, சென்னை சர்வதேச திரைப்பட விழா போன்று நடக்கும் பெரிய திரைப்படவிழா பெங்களூரு சர்வேதச திரைப்பட விழாவாகும். இது பெங்களூர் மற்றும் மைசூருவில் நடக்கும். ஆண்டுதோறும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதம் நடக்கும் இந்த விழா, இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மார்ச் 3ம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடக்கிறது.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விழாவுக்கான லோகோவை வெளியிட்டு அறிவித்தார். பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவை கர்நாடக அரசும், கர்நாடகா சலனசித்ரா அகாடமியும் இணைந்து நடத்துகிறது. திரைப்பட விழாவில் பங்கேற்கும் படங்கள், கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கர்நாடக சலனசித்ரா அகாடமி செயலாளர் சுனில் பூராணிக் தெரிவித்துள்ளார்.