உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வாய்ப்பு கிடைக்காவிட்டால் தயாரிப்பாளர்களை தேடி ஓடுவேன்: டாப்ஸி

வாய்ப்பு கிடைக்காவிட்டால் தயாரிப்பாளர்களை தேடி ஓடுவேன்: டாப்ஸி

பாலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர். பிங்க் படத்தின் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆனார். அதன்பிறகு ரன்னிங் ஷாதி, தி காசி அட்டாக், நாம் ஷபானா உள்பட பல படங்களில் நடித்த அவர் தப்பட், ராஷ்மி ராக்கெட், ஹசன் தில்ருபா படங்கள் மூலம் சோலோ ஹீரோயின் ஆனார். இப்போது கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜின் வாழ்க்கை கதையான சபாஷ் மிது, உள்பட 4 பாலிவுட் படங்களிலும் தலா ஒரு தெலுங்கு, தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: முன்பெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் எல்லாம் நடித்தேன். இப்போது தேர்வு செய்து நடிக்கும் இடத்திற்கு வந்திருக்கிறேன். எனது படங்களை மக்கள் ஏற்றுக் கொள்வதால் நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இனி நான் சினிமாவைத் தேடி ஓடுவதில்லை. ஒருவேளை படங்கள் இல்லை என்றால் நல்ல தயாரிப்பாளர்களை தேடி நான் ஓடுவேன். எனக்காக இந்த வேலையை யாரும் செய்ய மாட்டார்கள். நான் சுதந்திரமாக இருப்பதால் எனக்கான வேலையை நானே செய்து கொள்வேன். என்று கூறியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !