பாரதி கண்ணம்மா நடிகைக்கு திருமண நிச்சயதார்த்தம்
ADDED : 1347 days ago
விஜய் டிவியின் டாப் ஹிட் தொடரான பாரதி கண்ணம்மாவில் ஆரம்பத்தில் இருந்த பல கதாபாத்திரங்கள் பாதியிலேயே கழட்டி விடப்பட்டுள்ளன. அந்த வகையில் சவுந்தர்யாவின் மகளாக ஸ்ருதி என்ற கதாபாத்திரம் இருந்தது. அவர் கருப்பாக இருப்பதால் சவுந்தர்யாவுக்கு பிடிக்காது என திரைக்கதை நகர்ந்தது. இந்நிலையில் ஸ்ருதியின் கதாபாத்திரம் திடீரென முடித்து வைக்கப்பட்டது. பாரதி கண்ணம்மாவில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர், நடிகை ஸ்ருதி சண்முகம்.
முன்னதாக நாதஸ்வரம் தொடரில் நடித்து பிரபலமானவர். இவருக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஸ்ருதிக்கு அர்விந்த் என்ற வக்கீல் மாப்பிள்ளையுடன் சமீபத்தில் நிச்சயாதார்த்தம் நடந்துள்ளது. அதன் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஸ்ருதி பகிர்ந்துள்ளார். இதனையடுத்து பலரும் ஸ்ருதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.