பிப்.,11ல் கடைசி விவசாயி ரிலீஸ்
ADDED : 1351 days ago
தமிழகத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பல திரைப்படங்கள் அடுத்தடுத்த வெளியிட காத்திருக்கின்றன. இந்த நிலையில், விஜய் சேதுபதி நடித்த கடைசி விவசாயி என்ற திரைப்படம் முதலில் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 11ம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.