சிவகார்த்திகேயனின் டான் படம் மார்ச் 25ல் ரிலீஸ்
ADDED : 1392 days ago
டாக்டர் படத்தை அதையடுத்து சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடத்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி ,எஸ். ஜே .சூர்யா, சூரி, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கல்லூரி கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். கொரோனா பிரச்னையால் ரிலீஸை தள்ளி வைத்திருந்த படக்குழு இப்போது தியேட்டர்களில் 50 சதவீதம் இருக்கை என்றபோதும் இந்த தேதியை அறிவித்துள்ளனர்.