உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கங்குபாய் கத்தியவாடி பிப்ரவரி 25ம் தேதி வருகிறார்

கங்குபாய் கத்தியவாடி பிப்ரவரி 25ம் தேதி வருகிறார்

கடந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாலிவுட் படங்களில் ஒன்று கங்குவாய் கத்தியவாடி. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் இந்த படம் மும்பயைில் இப்போதும் வாழ்ந்து வரும் கங்குபாய் என்கிற பெண் தாதாவின் கதை. பாலியல் தொழிலாளியாக இருந்து அவர் எப்படி அண்டர் கிரவுண்ட் தாதா உலகின் ராணி ஆனார் என்பது கதை. 'மாபியா குயின்ஸ் ஆப் மும்பை' என்ற புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கங்குபாய் கத்தியவாடியாக ஆலியா பட் நடித்துள்ளார். கடந்த ஆண்டு பலமுறை தள்ளி வைக்கப்பட்ட இந்த படம் இந்த ஆண்டு ஜனவரி 6ம் தேதி வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனாவின் 3வது அலை, ஒமிக்ரான் பிரச்சினையால் நாடு முழுக்க ஊரடங்கு அறிவிக்கப்பட தேதி குறிப்பிட படாமல் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து, ஊரடங்கு தளர்த்தப்பட்டு வரும் நிலையில் வருகிற பிப்ரவரி 25ம் தேதி படம் வெளிவரும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !