உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளம் தவிர 4 மொழிகளில் 'வலிமை' ரிலீஸ்

மலையாளம் தவிர 4 மொழிகளில் 'வலிமை' ரிலீஸ்

வினோத் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடித்துள்ள படம் 'வலிமை'. இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த மாதம் ஜனவரி 13ம் தேதி வெளியாக வேண்டிய படம். ஆனால், ஒமிக்ரான் கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள்.

தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, பெரிய படங்களின் அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக ஆரம்பித்தன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'வலிமை' படமும் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்தத் தேதியில்தான் படம் வெளியாகும் என தகவல் பரவி இருந்தது.

'வலிமை' படத்தை முதலில், தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில்தான் வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால், இன்று வெளியான போஸ்டரில் கூடுதலாக தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளையும் சேர்த்துள்ளார்கள். ஆனால், மலையாளத்தில் படத்தை வெளியிடவில்லை. அஜித் நடித்த ஒரு தமிழ்ப் படம் முதல் முறையாக 4 மொழிகளில் வெளியாவது இதுவே முதல் முறை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !