உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முத்தையா உடன் மீண்டும் இணையும் விஷால்

முத்தையா உடன் மீண்டும் இணையும் விஷால்

கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள விருமன் படத்தை இயக்கியிருக்கும் முத்தையா அடுத்தபடியாக விஷால் நடிக்கும் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது ஸ்டோன் பென்ச் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். விருமன் படம் திரைக்கு வந்ததும் இந்த படத்தை தொடங்குகிறார் முத்தையா. விஷாலும், முத்தையாவும் ஏற்கனவே 2016ம் ஆண்டு வெளியான மருது படத்தில் இணைந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது விஷால் நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் பிப்ரவரி 4ஆம் தேதி வெளியாகும் நிலையில், லத்தி, மார்க் ஆண்டனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !