உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய்யின் பீஸ்ட் ஓபனிங் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகிறது

விஜய்யின் பீஸ்ட் ஓபனிங் பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகிறது

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, விடிவி. கணேஷ், அபர்ணா தாஸ் உட்பட பலர் நடித்துள்ள படம் பீஸ்ட். தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் ஓப்பனிங் பாடலை அனிருத் இசையில் எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இந்தப்பாடலின் மேக்கிங் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் விஜய், நெல்சன், அனிருத், சிவகார்த்திகேயன் ஆகியோர் தோன்றும் காட்சிகள் இடம்பெறுகிறது. விரைவில் இதை வெளியிட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !