வடபழனி கோயிலில் ரம்யா பாண்டியன் வழிபாடு
ADDED : 1441 days ago
சினிமா படப்பிடிப்பு, போட்டோஷூட் என பிஸியாக உள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். இடையில் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் தனது அம்மா, சகோதரி உடன் சென்னை வடபழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதுப்பற்றி ரம்யா கூறுகையில், ‛‛நான் எப்போதும் வழக்கமாக கோயில் செல்வது வழக்கம். வடபழனி முருகன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு வர ஆசைப்பட்டேன். இப்போது நிறைவேறியது. இறைவனை பார்த்தது மகிழ்ச்சி'' என்றார்.