மகேஷ்பாபுவின் படம் மே 12-ல் ரிலீஸ்
ADDED : 1347 days ago
தெலுங்கில் பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ள படம் சர்க்காரு வாரி பாட்டா. தமன் இசை அமைத்துள்ள இந்த படம் சங்கராந்தியை யொட்டி கடந்த ஜனவரி 11-ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர், பிரபாஸின் ராதே ஷ்யாம் போன்ற படங்கள் வரிசையில் மகேஷ்பாபு படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனாவால் இந்த படங்களும் தள்ளிபோகின. இந்த நிலையில் தற்போது வருகிற மே மாதம் 12ஆம் தேதி உலகம் முழுக்க சர்க்கார் வாரி பாட்டா வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.