சிவ சிவா படத்தின் தலைப்பு மாற்றம்
ADDED : 1389 days ago
ஜெய் நடிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் சிவ சிவா. இந்த படத்தின் தலைப்பு தற்போது வீரபாண்டியபுரம் என்று மாற்றப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் சுசீந்திரன். அதில், ஜெய் நடிப்பில் சிவசிவா என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளேன். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை பார்த்த எனது நண்பர்கள் இந்த படம் கிராமம் சார்ந்த திரைப்படமாக இருப்பதால் சிவசிவா என்ற தலைப்புக்கு மாறாக மண்சார்ந்த கிராமத்து தலைப்பு வைத்தால் இன்னும் திரை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்று கூறினார்கள். அவர்களின் இந்த ஆலோசனையை அடுத்து தயாரிப்பாளரின் சம்மதத்துடன் சிவசிவா இந்த தலைப்பை மாற்றி வீரபாண்டியபுரம் என்று டைட்டில் வைத்துள்ளேன் என தெரிவித்திருக்கிறார் சுசீந்திரன்.